குரு மகிமை

இன்னிக்கு வியாழன் குருவுடைய நாள்.

இந்த நன்னாளில் நாம் ஆன்ம குருவின் மகிமைகளை தெரிந்துக்கொள்வோம்.

நம்ம சனாதன தர்மத்துல எப்படி structure பண்ணியிருக்கானா “மாதா, பிதா, குரு, தெய்வம்” ன்னு. ஏன் இப்படி பண்ணனும். தெய்வம், குரு மாதா பிதான்னு வெச்சிருக்கலாமே?

மாதாவின் மூலமாதான் நாம் பூமிக்கு வரோம். ஆக நம் ஆதி குரு மாதா தான். கொஞ்சம் நாம வளர்ந்தவுடனே நம்முடைய அறிவுக்கண் திறக்க உதவி நம்மள ஒரு நிலைக்கு கொண்டுவறது தந்தை. இவர் ஞான குரு. இதுக்கு அப்புறம் வர குருதான் நம்மை இந்த பிறப்பு இறப்பு சுழற்சிலேர்ந்து காப்பாத்தி இறைவனிடம், அதாவது எங்கிருந்து வந்தோமோ அங்கேயே அனுப்பி நம்மை எப்பொழுதுமே பேரானந்தத்தில் திளைக்கவைக்கும் ஆன்ம குரு. தெய்வம் கடைசி ஏன்னா ஆன்ம குரு வழிகாட்டாம நம்பளால தெய்வத்தை பார்க்க முடியாது.

மாதா ஆதி குரு. பிதா ஞான குரு, குரு ஆன்ம குரு.

மனுஷ வாழ்க்கையில இந்த மூன்று குருக்களுமே தேவை. முதல் இரண்டு குருக்களும் நமக்கு தானாவே கிடைத்துவிடுகிறது. மூன்றாவது குரு, நாம் முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும். ஆம் நாம் ஆன்ம தாகத்துடன் தேடலை ஆரம்பித்து, நம் ஆன்ம எண்ணத்தை வளர்த்துக்கொண்டு வரும்போது, சரியான நேரம், நமக்கான தகுதி எல்லாம் கூடி வரும்போது நம்மை தேடி நம் குரு வருவார்.

இந்த குருதான் நம் கர்மாக்களை ஏற்றுக்கொண்டு நம் பாவ மூட்டைகளை சுமந்து, நமக்கு ஆன்ம விடுதலை கொடுக்கிறார். இவரே நம்முடைய ஆன்ம வளர்ச்சியில் ஒரு நிலைக்கு வந்தவுடன், அதோ பார் அவரே உன் கடவுள் என நமக்கான கடவுளை, பிரம்மத்தின் காட்சியை நமக்கு காட்டி அருளுகிறார். ஏசு சிலுவை சுமப்பது இந்த கருத்தின் குறியீடே.

தன் மாணவனை எக்காலத்திலும், எந்த ஸூழ்நிலையிலும் குரு கைவிடுவதே இல்லை.

பிரம்மத்தின் காட்சி கிடைத்துவிட்டால் அப்புறம் திரும்ப வருதல் எப்படி சாத்தியம்?

குருஜி ராமகிருஷ்ணர் அழகாக இதை சொல்வார். “கடலின் ஆழத்தை அளந்து சொல்கிறேன் என்று உப்பில் செய்த பொம்மை சொல்லிவிட்டு கடலில் இறங்கியதாம். ” அதே போலதான் நாமும் பிரம்மத்தின் காட்சி கிடைத்தவுடன் நமக்கான விடுதலை கிடைத்துவிடுகிறது.

குருவினால் மட்டுமே இந்த விடுதலை நமக்கு தருதல் சாத்தியம்.

தன் மகனே குருவாக உயர்ந்தானாலும் சரி, அந்த குருவினால் அந்த தாய்க்கு விடுதலை தரமுடியும். இதை நிகழ்த்தி காட்டியவர் பகவான் ரமண மகரிஷி.

இப்பொழுது புரிகிறதா ஆன்ம சாதகனுக்கு குரு எவ்வளவு அவசியம் என?

அதே போல உங்கள் தாய் தந்தைக்கு சேவை செய்வதும் குரு சேவையே.

ஆதி குருவுக்கும், ஞான குருவுக்கும் சேவை செய்தால், ஆன்ம குரு தேடி வருவார். இது என் வாழ்க்கையிலேயே நடந்தது சமீபத்தில்.

ஆகவே நண்பர்களே, உங்கள் தாய் தந்தையை கடைசி வரையில் அவர்கள் மனம் நோகாமால் பார்த்துக்கொள்ளுங்க.

தொடர்ந்து ஆன்ம வளர்ச்சியில் கவனம் செலுத்துங்க.

உங்க குரு உங்களை தேடி வந்து அபயம் அளித்து உங்களுக்கான விடுதலையை நிச்சயம் தருவார்.

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *