உங்கள் பிள்ளைகள் ரோபாட் அல்ல

பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை இன்று என்னவென்றால் என் பெண் பிள்ளை பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிறாங்க ஆனால் ரொம்ப தூங்குகிறாங்க. காலைல சீக்கிரம் எழுந்து படிக்க மாட்டேங்கிறாங்க என்பதுதான்.

அப் பெற்றோர்களை பார்த்து நான் கேட்பது, உங்களின் மகன்/மகளின் ஒரு நாளைய அட்டவணை என்ன?

“சார் காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போய்டுவாங்க, அப்புறம் 3:30 பள்ளிவிட்ட பின்னே டியூஷன் அது சுமார் 6:30 வரைக்கும் போகும், வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்டுட்டு, ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட். அப்புறம் 7:30 லேர்ந்து, 10 வரைக்கும் வீட்டுபாடம் எழுதறது, படிக்கிறது, ப்ராஜெக்ட் வொர்க் பண்ணறது. அப்புறம் சாப்ட்டுட்டு 11 மணிக்கு படுக்கை. ”

இதுதான் பதில் பல பெற்றோர்களிடம் இருந்து.

“அப்போ சுமார் 15 மணி நேர நாளில் 1:30 மணி நேர பிரேக். மதியம் லஞ்ச் ப்ரேக், சாயந்தரம் பள்ளி விட்டவுடன் ஒரு அரை மணிநேரம், அப்புறம் டியூஷன் விட்டவுடன் ஒரு அரை மணிநேரம். அவ்வளவே”

இது தவிர லீவு நாட்களில் பாட்டு கிளாஸ், மிருதங்கம், வயலின் கிளாஸ் இத்யாதி, இத்யாதி.

நான் கேட்கிறேன், உங்க பசங்க என்ன ரோபோட்டா? டைர்டே ஆகாமல் தொடர்ந்து உழைப்பதற்கு?

இத்தனை மணி நேரம் போகஸ் பண்ணனும்னா எந்த அளவுக்கு அவங்க energy spend பண்ணனும்? அப்போ அவங்களுக்கு எவ்வளவு ஒய்வு தேவை?

குறைந்த பட்சமாக எட்டு மணிநேரமாவது தூக்கம் தேவை, இதையும் கட் பண்ணு எழுந்து படின்னா ஒரு நாள் செய்ய முடியும், ரெண்டுநாள் செய்யமுடியும், மூணாவது நாள் உடம்பு படுத்துடும்.

ஆகையால் உங்கள் குழந்தைகளின் உடல் நலமே உங்களின் முதல் அக்கறையாக இருக்கவேண்டும்.

படிப்பு முக்கியம் அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம், நீங்கள் உங்கள் குழந்தைகளின் நேர பயன்பாட்டை கூர்ந்து கவனித்து, தேவை இல்லாத கிளாஸ்களில் இருந்து அவர்களை நிறுத்தி, சரியான ஒய்வு அவர்களுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்வது உங்களின் பொறுப்பு.

மார்க், மார்க் என ஓடி, தேவைக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு, அவர்களின் உடல்நிலையை கெடுத்து, எதிர்காலத்தையும் கெடுக்காதீர்கள்.

நன்றி.

ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன்
8778723474

%d bloggers like this: